கலப்பட நெய்யில் 20 கோடி லட்டு: சந்திரபாபு குற்றச்சாட்டு

கலப்பட நெய்யில் 20 கோடி லட்டு: சந்திரபாபு குற்றச்சாட்டு

2 mins read
69238abe-3c46-4ec5-8a65-addc61099b69
திருப்பதி லட்டு தொடர்பாக கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆந்​திர சட்டமன்றத்தில் விவாதம் நடத்திய ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு. - படம்: இந்து தமிழ் திசை

அமராவதி: திருப்​பதி ஆலயம், கடந்த ஆட்​சி​யில் 60 லட்சம் லிட்​டர் கலப்​பட நெய்​யில் செய்த 20 கோடி லட்டுகளை விநி​யோகம் செய்​த​தாக ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு குற்​றஞ்சாட்​டி​னார்.

ஆந்​திர சட்டமன்றத்தில் தற்போது வரவுசெலவுக் கூட்​டத்​தொடர் நடை​பெற்று வருகிறது. அதில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 24) நடந்த விவாதத்தில் திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் குறித்து விவாதிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 3 மணி நேரம் நடந்த அந்த விவாதத்தில் ஜெகன் ​மோகன் ரெட்​டி​யின் ஆட்​சி​ காலத்தில் கலப்​படம் உள்ள நெய்​யை தெரிந்தே வாங்​கிய​தாக குற்றஞ்சாட்டப்பட்டது.

“கலப்பட நெய் தொடர்பாக உச்ச நீதி​மன்றத்தின் உத்​தர​வின் பேரில் சிறப்​புக் குழு விசா​ரணையை நடத்​தி​யது. விசாரணையில் அதி​காரி​கள், ஊழியர்​கள், நிபுணர்​கள் என அனை​வரும் சேர்ந்தே குற்றம் புரிந்தனர் என்பது தெரியவந்துள்ளது,” என்றார் திரு சந்திரபாபு.

“2019- 2024ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த அரசாங்கம் கிட்டத்தட்ட 60 லட்​சம் லிட்​டர் கலப்பட நெய்யை வாங்கி உபயோகித்​துள்​ளது. இதில் ரூ.231.51 கோடி ஊழல் நடந்​துள்​ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.

“லட்டு தயாரித்த நெய்​யில் விலங்​கு​களின் கொழுப்​பு, மீன் கொழுப்பு ஆகியவை கலந்​திருப்​ப​தாக நான் ஆதாரம் இல்லாமல் கூற​வில்​லை. தேசிய ஆய்வகம் கொடுத்த அறிக்​கையை ஆதா​ர​மாக கொண்டுதான் அதைச் சொல்கிறேன்,” என்றார் திரு சந்திரபாபு.

துணை முதல்​வர் பவன் கல்​யாண், “கலப்பட நெய் விவ​காரத்​தில் தவறு செய்தவர்கள் யாராக இருப்​பினும் அவர்கள் கட்டாயம் தண்​டிக்​கப்படுவார்கள்,” என்று சட்டமன்றத்தில் கூறினார்.

குறிப்புச் சொற்கள்