15 ஆண்டாக நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாததால் முதன்மை செயலாளருக்கு ரூ.20 லட்சம் அபராதம்

15 ஆண்டாக நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாததால் முதன்மை செயலாளருக்கு ரூ.20 லட்சம் அபராதம்

படம்: ஊடகம்

19 May 2025 - 5:30 pm

1 mins read

திருச்சி: திருச்சி தொட்டியம் சீனிவாசநல்லூர் காவிரி ஆற்றில் 2001-2004 வரை மணல் குவாரி நடத்த அரசு அனுமதி அளித்தது.

சில மாதங்களில் மணல் குவாரியின் செயல்பாட்டை அரசே ஏற்றுக்கொண்டது.

குவாரி உரிமம் பெற்றவர்கள், அரசாணையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

மனுதாரர்களுக்கு சாதகமான சில நிவாரணத்தை நீதிமன்றம் வழங்கிய நிலையில் அரசு உத்தரவையும் உறுதி செய்தது. உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததை எதிர்த்து மனுதாரர்கள் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.

15 ஆண்டுகளாக நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாததால் தமிழக தொழில்துறை முதன்மை செயலாளருக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

தொட்டியம் உள்ளிட்ட காவிரிக் கரையோரப் பகுதிகளில் குடிநீர்க் கிணறு உள்ள இடங்களில் திருட்டு மணல் எடுப்பதால் கரையோர கிராமங்களுக்குக் குடிநீர் வழங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்