போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள மோரெனா மாவட்டத்தில் சிறப்பு ஆயுதப் படைகளின் ஆயுதக் கிடங்கு உள்ளது.
அங்கிருந்து 9 மி.மீ. துப்பாக்கிகளில் பயன்படுத்தக் கூடிய தோட்டாக்கள் திருடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 200 தோட்டாக்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து சிறப்பு ஆயுதப் படைகளின் இரண்டாவது மற்றும் ஐந்தாவது படைப்பிரிவைச் சேர்ந்த படைவீரர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்கிறது.