புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்வதற்கு முதல்முறையாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. "பயங்கரவாதத்திற்கு எதிராகப் பணியாற்றவேண்டிய கடமை அர சுக்கு உள்ளது. அதிலிருந்து தவறி நடக்கும் விதத்தில் பயங்கரவாதிகளுடன் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளக் கூடாது," என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. கைதிகளை விடுவிக்க பாஜக நியமித்த ஆளுநருக்கு பாஜகவின் கூட்டாளியான அதிமுக பரிந்துரை செய்துள்ளதாக குற்றஞ் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, அவர்களைத் தண்டிக்கும் கடமையில் இருந்து மாநில அரசு ஒருபோதும் நழுவக்கூடாது என் றும் வலியுறுத்தி உள்ளது.
புதுடெல்லியில் செய்தியாளர் களிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜீவாலா, "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் விஷயத்தில் மத்திய அரசும் தமிழக அரசும் அரசியல் சதிச் செயலில் இறங்கி உள்ளன. "அந்தப் பயங்கரவாதிகள் ராஜீவ் காந்தி மட்டுமின்றி, அப் பாவி பொதுமக்களும் காவல் துறையினரும் கொல்லப்பட காரணமாக இருந்துள்ளனர். "உச்ச நீதிமன்றத்தால் தண் டிக்கப்பட்ட அவர்களின் கருணை மனுக்கள் இதுவரை நிராகரிக்கப் பட்டே வந்துள்ளன.

