'மோட்டார் சைக்கிள் கடனைக் கட்டவே கொலை செய்தேன்'

'மோட்டார் சைக்கிள் கடனைக் கட்டவே கொலை செய்தேன்'

1 mins read
Google News Preferred Icon

மும்பை: கடந்த வாரம் காணாமல்போன எச்டிஎஃப்சி வங்கியின் உதவித் தலைவர் 39 வயது சித்தார்த் சங்வியின் அழுகிப் போன உடல் நவி மும்பையில் திங்களன்று காலை பிணமாக மீட்கப்பட்டது. சர்பராஸ் ஷேக் என்ற 20 வயது இளையர் சித்தார்த் சங்வியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு, மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். தனது மோட்டார் சைக்கிள் வாகனத்துக்கு செலுத்த வேண்டிய மாதத் தவணையைச் செலுத்துவதற்காகவே கொலைசெய்தேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். தனது திருட்டு முயற்சி தவறுதலாக கொலையில் முடிந்து விட்டதாகவும் இளையர் சர்பராஸ் ஷேக் கூறினார்.