ஊழலை ஒழிக்க வீடு தேடி வரும் 40 சேவைகள்

ஊழலை ஒழிக்க வீடு தேடி வரும் 40 சேவைகள்

1 mins read
Google News Preferred Icon

புதுடெல்லி: டெல்லியில் உதவி தேவைப்படுவோருக்கு அவர்கள் வீடு தேடி வந்து டெல்லி அரசு உதவி புரிந்து வருகிறது. ஊழலை ஒழிப்பதற்காகவே அரசின் சேவைகளை வீடுகளுக்கே நேரடியாக வந்து வழங்குவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித் துள்ளார். நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள இந்த திட்டத்தை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார். பிறப்பு, இறப்பு, சாதி, வருமானம், திருமணச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், குடிநீர் இணைப்பு உள்ளிட்ட 40 வகையான சேவைகளை வீட்டுக்கே நேரடியாகச் சென்று வழங்க மாநில அரசு திட்டமிட்டது. சான்றிதழ்கள் பெறுவதற்காக அரசு அலுவலகங்களில் மக்கள் காத்திருப்பதைத் தவிர்க்கவும் அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுவதைத் தடுக்கவும் டெல்லி அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. முதல் நாளான நேற்று வீடு தேடி வரும் சேவை திட்டத்தில் பலன்பெற 21,000 பேர் அழைப்பு செய்தனர்.