உலகின் மிகப்பெரிய சரக்கு விமானங்களில் ஒன்றான 'ஆன்டனோ ஏஎன்-124' சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் தரையிறங்கியது. உலகின் இரண்டாவது பெரிய சரக்கு விமானமான இதில் 150 டன் எடை வரை சரக்கு ஏற்ற முடியும். ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் சீனாவில் இருந்து 53 டன் எடை இயந்திரங்களுடன் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியது. இன்னொரு நாட்டில் இருந்து இந்தியாவுக்கு விமானம் மூலம் இத்தனை டன் எடை வந்தது இதுவே முதல் முறை. அந்த விமானம் நேற்று காலை சென்னையில் இருந்து மீண்டும் சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. படம்: தமிழகத் தகவல் ஊடகம்
உலகின் இரண்டாவது பெரிய சரக்கு விமானம் சென்னைக்கு வந்து சென்றது
1 mins read
-

