சென்னை: திருச்சி விமான நிலையத்தில் பணியாற்றி வந்த 41 அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள் ளனர். கடந்த மாதம் திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ நடத்திய சோதனையை அடுத்து இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்குத் தங்கம் கடத்தி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருச்சி அனைத்துலக விமான நிலையங்கள் மூலமாகத்தான் தங் கம் அதிகளவு கடத்தி வரப் படுகிறது. இக்கடத்தலுக்கு விமான நிலைய அதிகாரிகள் உதவி செய் வதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்துக் கடந்த மாதம் திருச்சி விமான நிலை யத்தில் 15க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் அடங்கிய குழு அதிரடி சோதனை நடவடிக்கை மேற் கொண்டது. அச்சமயம் சிங்கப்பூரில் இருந்து வந்த தனியார் விமானத் தில் பயணம் மேற்கொண்ட பயணிகளும் தீவிர சோதனைக்கு ஆட்படுத்தப்பட்டனர். இதில் விமான நிலைய சுங்கத்துறை உதவி ஆணையர், கண்காணிப்பா ளர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 6 பேர் கடத்தலுக்கு உதவி செய்தது உறுதியானது.
திருச்சி விமான நிலையம். படம்: இணையம்

