உத்தரப் பிரதேசம்: எரிவாயுத் தொட்டி வெடித்ததில் 6 பேர் பலி

உத்தரப் பிரதேசம்: எரிவாயுத் தொட்டி வெடித்ததில் 6 பேர் பலி

1 mins read
2efdae25-d9c3-48df-8e2f-dd88c703fba9
-
Google News Preferred Icon

வடஇந்தியாவின் உத்தரப் பிரதே மாநிலத்தின் பிஜ்னோர் எனும் மாவட்டத்தில் உள்ள தனியார் பெட்ரோல் ரசாயன தொழிற்சாலை ஒன்றில் நேற்று எரிவாயுத் தொட்டி வெடித்ததில் அறுவர் உயிரிழ்ந்- தனர். இதில் எண்மர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்தில் மேலும் மூவர் காணாமல்போன தாக போலிசார் தகவல் தெரிவித் தனர். மோஹிட் பெட்ரோல் ரசா யன தொழிற்சாலையில் தொழி லாளர் கள் மீத்தேன் எரிவாயு தொட்டி ஒன்றை பழுதுபார்த்துக் கொண்டு இருந்தபோது இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததாக பிஜ்னோர் போலிஸ் சுப்ரின்டென் டண்ட் உமேஷ் குமார் சிங் கூறி னார்.

இதில் சம்பவ இடத்திலேயே அறுவர் பலியானதாகவும் இரு தொழிலாளர்கள் உட்பட மேலும் ஆறு பேர் அங்குள்ள மாவட்ட மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச்செல்லப்பட்டதாகவும் திரு சிங் விவரித்தார். படுகாயம் அடைந்தவர்களின் நிலை கவ லைக்கிடமாக உள்ள தாகக் கூறப் படுகிறது. காணாமல் போனவர் களைத் தேடும் முயற் சிகள் தொடர் வதாகவும் திரு சிங் சொன்னார்.