2025 இந்தியாவின் ஆண்டு: பிரதமர் மோடி புகழாரம்

2 mins read
7ceee266-9dfd-4a64-a3c6-40957d5ba61c
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கவுகாத்தியில் உள்ள லோக்பிரியா கோபினாத் பொர்டோலாய் பன்னாட்டு விமான நிலையத்தில் புதிய முனையத்தை டிசம்பர் 20ஆம் தேதி திறந்துவைத்து உரையாற்றியபோது எடுத்த படம். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2025ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி சமூக வலைத்தளத்தில் இந்தியாவின் சாதனைகளைப் பட்டியலிட்டுப் புகழாரம் சூட்டியுள்ளார்.

அதில், “இந்தியாவில் கடந்த 11 ஆண்டுகளாகப் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடப்பு 2025 ஆம் ஆண்​டில் மிகப்​பெரிய சீர்​திருத்​தங்​கள் அமல் செய்​யப்​பட்​டன. அதனால் இந்தியா மாபெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது. எனவே, 2025ஆம் ஆண்டு இந்​தி​யா​வின் ஆண்​டாக நினை​வு​கூரப்​படும்,” என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் மூலம் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக உலகளவில் இந்தியா அங்கீகரிக்கப்பட்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மேலும், இந்திய மக்களின் கண்டுபிடிப்பு மற்றும் புத்தாக்க ஆற்றலால் இந்தியா உலகளாவிய கவனத்தை ஈர்த்து வருகிறது என்று கூறினார்.

இந்தியாவை உலகம் இப்போது நம்பிக்கையுடன் பார்க்கிறது. அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் மூலம் முன்னேற்றத்தின் வேகம் துரிதப்படுத்தப்பட்ட விதத்தை பார்த்து வெளிநாட்டினர் நம்மைப் பாராட்டுகிறார்கள் என்று அவர் கூறினார்.

இந்தியா உயர்ந்த லட்சியத்துடன் திட்டங்களை விரைவாக நிறைவேற்றும் மாபெரும் மாற்றத்துடன் முன்னேறியுள்ளது. நாட்டு மக்கள் கண்ணியத்துடன் வாழவும், தொழில்துறைகள் வளரும் வகையில் நல்ல பல சீர்திருத்தங்களை நாடு கண்டுள்ளது என்றார்.

ஜிஎஸ்டி, தொழிலாளர் சட்டங்கள், வெளிநாட்டு முதலீடு, வரிவிதிப்பு, ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், வேலைவாய்ப்பு மற்றும் பலவற்றில் சீர்திருத்தங்களை பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

மத்​திய அரசின் சீர்​திருத்​தங்​களால் சிறு வணி​கர்​கள், இளம் தொழில்​நுட்ப நிபுணர்​கள், விவ​சா​யிகள், தொழிலா​ளர்​கள், நடுத்தர வர்க்க மக்​கள், மாணவர்கள் என அனைத்து தரப்​பினரும் பலன் அடைந்து வரு​கின்​றனர். மேலும், கல்வித்துறையில் நல்ல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று பிரதமர்​ நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்​.

இந்​திய அணுசக்தித் துறை அபார வளர்ச்சியடையும் விதத்தில் அந்தத் துறையில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் ஹைட்​ரஜன் எரிசக்தி உற்​பத்​திக்கு முன்​னுரிமை அளிக்​கப்​பட்டு வரு​கிறது.

மேலும், 2025ஆம் ஆண்​டில் ஜிஎஸ்டி வரி விகிதத்​தில் மிகப்​பெரிய மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டன. 5% மற்​றும் 18% என்ற இரு விகிதங்​கள் மட்​டும் அமல் செய்​யப்​பட்டு உள்​ளன. இதனால் அனைத்து வீடு​களி​லும் செலவுச் சுமை குறைந்​திருக்​கிறது. இதனால், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறு​வனங்​கள், விவ​சா​யிகள் பயனடைந்து வரு​கின்​றனர்.

2025ஆம் ஆண்​டில் தனி​நபர் வரு​மான வரிவிலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்​ச​மாக அதி​கரிக்​கப்​பட்டு உள்​ளது. வரி நடை​முறை​யில் வெளிப்​படைத்​தன்மை உறுதி செய்​யப்​பட்டு உள்​ளது.

மேலும், ஒரு வணிகத்தை எளிதாகத் தொடங்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரண​மாக மின்​னணு, ‘ஆட்டோ மொபைல்’ உட்பட பல்​வேறு துறை​களில் உள்​நாட்டு உற்​பத்தி அதி​கரித்​து, ஏற்​றும​தி​யும் கணிச​மாக அதி​கரித்து வரு​கிறது.

பெண்கள், அமைப்பு சாரா தொழிலர்கள் ஆகியோரின் நலன்கள் பாதுகாக்கப்படும் வகையில், புதிதாக 4 தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்