ஈரோட்டில் பட்டாசு மூட்டையை இறக்கியபோது வெடி விபத்து: மூவர் மரணம், ஐவர் காயம்

ஈரோட்டில் பட்டாசு மூட்டையை இறக்கியபோது வெடி விபத்து: மூவர் மரணம், ஐவர் காயம்

2 mins read
b5b19ddb-0851-4fca-aee7-ec6b7204b0bd
-
Google News Preferred Icon

ஈரோட்டில் நேற்று பட்டாசு மூட்டை- களை இறக்கியபோது எதிர்பாராத விதமாக பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் ஐவர் படுகாயமடைந்தனர். தீபாவளியை முன்னிட்டு காலை 6 மணிக்கு ஆட்டோவில் 15 மூட்டைகளில் பட்டாசுப் பொருட்கள் எடுத்து வரப்பட்டு இருந்தன. அவற்றை இறக்கி வைத்தபோது ஒரு பட்டாசு மூட்டை திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் ஏற்பட்ட தீ மளமளவென மற்ற பட்டாசு மூட்டைகளுக்குப் பரவி யது. இந்த விபத்து நிகழ்ந்த தெரு- வில் ஐந்து வீடுகளும் பட்டாசு வைக்கப்பட்டிருந்த ஆட்டோவும் மோசமாக சேதமடைந்ததாக தெரி விக்கப்பட்டது.

அதையடுத்து இடிபாடுகளை அகற்றும் பணியில் தீயணைப்புப் படை வீரர்கள் ஈடுபட்டனர். பட்- டாசு வெடித்ததால் ஏற்பட்ட சேதம் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக போலிசார் தெரிவித்தனர். சம்பவ இடத்திலேயே பரிதாப- மாக உயிரிழந்த அந்த மூவரின் சடலங்கள் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டன. இறந்த- வர்களின் அடையாளம் போலி சாரால் இன்னும் உறுதிப்படுத்தப்பட வில்லை. இருப்பினும், இறந்தவர்கள் கார்த்திக் ராஜா என்பவரும் ஆட்டோ ஓட்டுநரும் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவரும் ஆவர் என இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். ஈரோடு வளையல்கார வீதியைச் சேர்ந்தவரான சுகுமாரன் என்ப- வரின் மகன்தான் 21 வயது கார்த்திக் ராஜா என்று கூறப்படு கிறது.

பல உயிர்கள் பலியாகின்றன. ஈரோட்டில் பட்டாசு மூட்டையை இறக்கியபோது வெடி விபத்து: மூவர் மரணம், ஐவர் காயம் ஈரோட்டில் சாஸ்திரி நகரில். பட்டாசு வெடித்ததில் உருக்குலைந்து கிடக்கும் ஆட்டோ ரிக்ஷா. படம்: தமிழக ஊடகம்