நவம்பரில் இடைத்தேர்தல்: சத்தமின்றி தயாராகும் கட்சிகள்

நவம்பரில் இடைத்தேர்தல்: சத்தமின்றி தயாராகும் கட்சிகள்

1 mins read

சென்னை: வரும் நவம்பர் மாதத்தில் திருவாரூர், திருப்பரங் குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அச்சமயம் தெலுங்கானா மாநில சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, அதனுடன் சேர்த்து இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த தேர் தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஏற்கெனவே தமிழகத் தேர்தல் அதிகாரி சத்தியபிரபா சாகு, நவம்பரில் இடைத்தேர்தலை நடத்த தமிழக அரசு தயாராக இருப்பதாக மத் திய தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் வழி தெரியப்படுத்தியுள் ளார். இடைத்தேர்தல் நடப்பது உறுதியாகிவிட்ட நிலையில் இரு தொகுதிகளிலும் அதிமுக நிர்வாகிகள் சத்தமின்றி தேர்தல் பணிகளைத் துவங்கி உள்ளனர். இதேபோல் டிடிவி தினகரனும் பிரசாரப் பணிகளை முடுக்கி விட்டுள்ளார். திமுகவும் களத் தில் குதித்துவிட்டால் இரு தொகுதிகளிலும் தேர்தல் களைகட்டி விடும் என்கிறார்கள் அரசியல் கவனிப்பாளர்கள்.