'திமுக ஊழல்களை வெளியிடுவேன்'

'திமுக ஊழல்களை வெளியிடுவேன்'

1 mins read

ஓமலூர்: திமுகவினர் அதிமுகவின் ஊழல்களைப் பற்றி பேசி வரும் வேளையில் திமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை வெளியிடுவேன் என்று தமிழக முதல்வர் பழனிசாமி எச்சரித்துள்ளார். சேலம் வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். "எந்தத் துறையிலும் தவறு நடந்துள்ளதாக புகார் வர வில்லை. தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. கடந்தகால திமுக ஆட்சியில் பல்வேறு குற்றச் சாட்டுகள் உள்ளன. இனி அவை வெளியே வரும்," என்று பழனிசாமி குறிப்பிட்டார்.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் ஈடு பட்டுள்ளது குறித்து பேசிய அவர், "மேகதாது அணையைக் கட்டக் கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. கடும் குடிநீர் தட்டுப் பாடு ஏற்பட்டபோது தண்ணீர் இருப்பு இருந்தும் கர்நாடகா வழங்கவில்லை," என்றார். அமைச்சர்கள் மீது புகார் எழுந்தவுடன் அவர்களை குற்ற வாளியாகக் கருத முடியாது என்றும் அவர் சொன்னார். அண்மையில் சுகாதார அமைச் சர் விஜயபாஸ்கர் மீது குட்கா ஊழல் புகார் எழுந்துள்ள வேளை யில் முதல்வர் பழனிசாமி இவ் வாறு கூறியுள்ளார். "தமிழகத்தில், நிதி பற்றாக் குறை நிலவுகிறது. ஒவ்வொரு துறையிலும் நிதி ஆதாரத்தை பெருக்க வேண்டிய சூழல் உள் ளது," என்றார் பழனிசாமி.