சென்னை: விலை மதிக்க முடியாத பச்சை மரகத பிரகதம்பாள் சிலையைக் கண்டுபிடித்துத் தரு மாறு திருச்சியைச் சேர்ந்த எம். ஆனந்த் மோகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். "ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரசோழன் மூன்று அடி உயரத்தில் பச்சை மரகத கல்லால் ஆன ஸ்ரீபிரகதம்பாள் சிலையைச் செய்து புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் என்ற ஊரில் கோகர்ணேஸ்வரர்-பிரகதம் பாள் கோயிலில் வைத்தார்.
பின்னர், புதுக்கோட்டை சமஸ் தானத்தை ஆண்ட ஸ்ரீமார்த்தாண்ட பைரவ தொண்டைமான் இந்தச் சிலையை எடுத்துவிட்டு அதற்குப் பதிலாக கிரானைட் கற்களால் ஆன சிலையைச் செய்து கோயி லில் வைத்துவிட்டார். "அதே நேரம் பச்சை மரகத சிலையை திருச்சியில் உள்ள புதுக்கோட்டை சமஸ்தானத்துக் குச் சொந்தமான விருந்தினர் மாளிகையில் ஓரிடத்தில் அவர் புதைத்து வைத்தார். "இந்நிலையில் அந்த விலை மதிக்க முடியாத பச்சை மரகத சிலை பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டுவிட்டது. "அந்தச் சிலை புதைக்கப்பட்ட நிலம் தற்போது கார்த்திக் தொண் டைமானுக்குச் சொந்தமானதாக உள்ளது. ஆனால் மரகத சிலையைக் காணவில்லை. "இது குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையிடம் கடந்த 2013ஆம் ஆண்டில் இரண்டு முறையும் கடந்த ஜூன் மாதமும் புகார் செய்தேன்.
"இதுவரை எந்த நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. இந்த மரகத சிலையை மீட்க ஐ.ஜி.பொன். மாணிக்கவேலுக்கு உத்தரவிட வேண்டும்," என்று மனுவில் அவர் கூறினார். இந்த மனுவை நீதிபதிகள் ஆர். மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர். இதையடுத்து இந்த மனுவுக்கு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் வரு கிற 20ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதி பதிகள் உத்தரவிட்டனர்.

