ஏழாயிரம் பள்ளிகளில் மின்னிலக்க வகுப்பறைகள்

ஏழாயிரம் பள்ளிகளில் மின்னிலக்க வகுப்பறைகள்

1 mins read

சென்னை: தமிழகத்தில் உள்ள ஏழாயிரம் அரசு பள்ளிகளில் 'டிஜிட்டல்' வகுப்பறைகள் அமைக்கப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. சென்னை அரும்பாக்கம் அரசு மேல் நிலைப்பள்ளியில் மின் னிலக்க வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பள்ளி கல்வித் துறை முதன்மை செயலர் பிரதீப் யாதவ் திறந்துவைத்தார். அப்போது பேசிய அவர், இந்தப் பள்ளியில் தமிழ்நாடு அறக்கட்டளை வாயிலாக 30 லட்சம் ரூபாய் செலவில் மின்னிலக்க வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இதே போன்று தமிழகம் முழுவதும் 7,000 அரசு பள்ளிகளில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் மின்னிலக்க வகுப்பறைகள் அமைக்கப்படும்," என்றார். நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ் வர முருகன், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, திருவளர்செல்வி, பள்ளித் தலைமை ஆசிரியர் சேகர் ஆகியோர் பங்கேற்றனர்.