மோட்டார் வாகன ஆய்வாளரின் தரகர் வீட்டில் சோதனை; 100 பவுன் தங்க நகைகள் சிக்கியது

மோட்டார் வாகன ஆய்வாளரின் தரகர் வீட்டில் சோதனை; 100 பவுன் தங்க நகைகள் சிக்கியது

2 mins read

சேலம்: விழுப்புரம் கள்ளக் குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு என்பவர் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகப் பிடிபட்டு கைதா னார். ரமேஷ் என்பவர் தனது நான்கு சக்கர வாகனத்திற்குத் தகுதிச் சான்று பெற முயற்சி செய்தார். அப்போது அவரிடம் 25,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதை விரும்பாத ரமேஷ் லஞ்ச ஒழிப்புப் போலிசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து லஞ்சப் பணத்தை பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரிடம் ரமேஷ் ஒப்படைக்கும்போது மறைந் திருந்த காவல்துறையினர் பாபுவையும் அவரது உதவியாளர் செந்தில் குமாரையும் கைது செய்தனர். கைதான உதவியாளர் செந்தில் குமாருக்கு ஆத்தூர் கோட்டை எல்ஆர்சி நகரில் பங்களா உள்ளது. இந்தப் பங்களா சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப் பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த வீட்டின் கிரஹப் பிரவேசம் நேற்று நடைபெறு வதாக இருந்தது. செந்தில் குமார் கைதான தைத் தொடர்ந்து சேலம் லஞ்ச ஒழிப்பு காவல்துறை கூடுதல் எஸ்.பி. சந்திரமவுலி தலைமை யிலான காவல்துறையினர் நேற்று முன்தினம் மாலை ஆத் தூரில் உள்ள செந்தில்குமாரின் புது பங்களா, வணிக வளாகம், ஜோதிட நிலையங்களில் அதிரடி சோதனை நடத்தினர். சுமார் எட்டு மணிநேரம் நடந்த இந்தச் சோதனையில் 100 பவுன் நகைகள் மற்றும் 15 வங்கி கணக்குகள், சொத்து ஆவ ணங்கள் சிக்கியது.

மேலும் வங்கியில் ரூ.3 கோடி வரை அவர் பல்வேறு வகையில் முதலீடு செய் திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக நேற்று முன்தினம் கடலூரில் உள்ள பாபு வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட் டது. அப்போது ரூ.35 லட்சம் பணம், 15 கிலோ வெள்ளிப் பொருட்கள், 200 பவுன் தங்க நகைகள், 45 வங்கி கணக்குகள், மேலும் ஆறு வங்கி பெட்டகங்களின் சாவிகள், 500க்கும் மேற்பட்ட பத்திரங்கள் மற்றும் பலகோடி மதிப்புள்ள சொத்துகளின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.