பண்பாடு காக்கும் படித்த மணமக்கள்

1 mins read
024d2db3-0328-4434-aa3d-4f1815a485f1
-

ஈரோடு: கோபி அருகே உள்ள பா. வெள்ளாளப்பாளையத்தைச் சேர்ந்த கவிஅரவிந்த் என்பவர் பொறியியல் பட்டதாரி. என்றாலும் தன் தந்தையுடன் விவசாயத்தை வெற்றிகரமான முறையில் செய்து வருகிறார். பழமைகளைக் கட்டிக் காக்கவேண்டும் என்ற வேட்கை உள்ள இவருக்கு இதன் காரண மாக பெண்கொடுக்க யாருமே முன்வரவில்லை. கடைசியில் அத்தாணியைச் சேர்ந்த பிரவீணா, மாப்பிள்ளை ஒரு விவசாயி என்பதை அறிந்து மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித் தார். பிரவீணா எம்சிஏ படித்து சென்னையில் உள்ள ஒரு நிறு வனத்தில் வேலையும் பார்த்து வரு கிறார்.

இருவரின் முழு சம்மதத்துடன் திருமணம் புதன்கிழமை பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயி லில் பெரியவர்கள் முன்னிலையில் வெகுசிறப்பாக நடந்தது. திருமணம் முடிந்த பிறகு, குதிரை பூட்டிய சாரட் வண்டியில் மணமக்கள் ஏறிச்சென்றனர். உறவினர்களும் மாட்டு வண்டி களில் புடைசூழ வர எல்லாரும் விருந்துக்குச் சென்றனர்.

மணமகன் கவிஅரவிந்த், மணமகள் பிரவீணா இருவரும் குதிரை வண்டியில் ஏறிச்செல்ல வருகிறார்கள். படம்: தமிழக ஊடகம்