உல்லாச விடுதிபோல் புழல் சிறைச்சாலை

உல்லாச விடுதிபோல் புழல் சிறைச்சாலை

1 mins read
398a63ef-ba1b-430d-8214-b95497c04741
-
Google News Preferred Icon

சென்னை: தமிழக சிறைச்சாலை களில் கைத்தொலைபேசிப் புழக் கம் தாராளமாக இருப்பதாகவும் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப் பட்ட பொருட்களைக் கைதிகள் பயன்படுத்தி வருவதாகவும் புகார் கள் தலைதூக்கி வருகின்றன. இதுபோன்ற பொருட்களைச் சட்டவிரோதமாக சிறைக்குள் அதிகாரிகளே கடத்திச் சென்று கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக கைதிகளிடம் சிறைத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாகவும் தெரியவந்துள் ளது. பிணையில் வெளிவர ரூ.25,000 வரை லஞ்சம் கொடுக்க வேண்டி இருப்பதாக கைதிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்து இருக்கிறார்கள்.

மாநில மனித உரிமை ஆணை யம் தாமாகவே முன்வந்து நட வடிக்கை எடுத்ததை அடுத்து மாநில சிறைகளில் சோதனைகள் நடந்து கைத்தொலைபேசிகள் உள் ளிட்ட பலவும் கைப்பற்றப்பட்டு வருகின்றன. பிடிபட்ட கைத்தொலைபேசி களை ஆராய்ந்தபோது அவற்றில் சிறைச்சாலை படங்கள் இருந்தன. கைதிகள் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது படங் கள் மூலம் அம்பலமாகி இருக் கிறது. ‚உல்லாச விடுதிகளைப் போன்று கைதிகளின் அறை அழகுபடுத்தப்பட்டு உள்ளதை அந்தப் படங்கள் காட்டுகின்றன.

புழல் சிறைக் கைதிகள் எடுத்த புகைப்படங்களில் இது ஒன்று. கைதிகள், கைதிகள் போல் இல்லை. படம்: தமிழக ஊடகம்