பசுமைச்சாலை திட்ட மாற்றம் பற்றி அன்புமணி கருத்து

பசுமைச்சாலை திட்ட மாற்றம் பற்றி அன்புமணி கருத்து

1 mins read

சென்னை: பசுமைச்சாலைத் திட் டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் என்று பாமக இளை ஞரணித் தலைவர் அன்புமணி அறிக்கையில் வலியுறுத்தினார். அந்த எட்டு வழித் திட்டத்தை மாற்றி முதற்கட்டமாக ஆறு வழிச்சாலையை அமைத்துவிட்டு, அடுத்தக் கட்டமாக அதை விரிவுபடுத்தலாம் என்ற முடிவு இப்போது எட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இம்மாற்றத்தால் கையகப்படுத்தப்படும் நிலங் களின் அளவு மட்டும்தான் கால் வாசி குறைந்துள்ளதே தவிர, நிலங்களை பறிகொடுக்கும் விவ சாயிகளின் எண்ணிக்கை குறை யாது என்றார். "வால் போன்ற சிறிய பகுதியை மட்டும் விட்டு வைப்பார்கள். அந்த நிலத்தையும் அடுத்த சில ஆண்டுகளில் சாலை விரி வாக்கம் என்ற பெயரில் கையகப் படுத்துவார்கள். எனவே பசுமைச்சாலைத் திட் டத்தை முழுமையாகக் கைவிடவே ண்டும்," என்றாரவர்.