கார் கடத்தல் மன்னன் கைது

1 mins read

திருச்சி: திருச்சியில் சாராய வியாபாரத்துக்கு கார் கடத்தலில் ஈடுபட்ட கடத்தல் மன்னன் சுரேஷை, 42, போலிஸ் கைது செய்தது. அவரிடமிருந்து ஆறு கார்கள், 30 பவுன் நகை பறி முதல் செய்யப்பட்டது. அவர் சட்டவிரோத சாராய வியாபாரி என்பதும் திருச்சி, புதுச்சேரி, திண்டுக்கல் உள்பட பல்வேறு இடங்களில் கார்களைத் திருடி அவற்றைச் சாராய வியா பாரத்துக்கு சுரேஷ் பயன்படுத்தி வந்தார் என்பதும் விசாரணை யில் தெரிந்தது. மேலும், சாராய வியாபாரம், கார் கடத்தல் மட்டுமின்றி ஆந்தி ராவில் இருந்து செம்மரம் கடத்து வதற்கும் அவர் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் போலிசில் அவர் சிக்கிக்கொண் டார்.

கரூர் மாவட்டம் குளித்தலை கீழபஞ்சப்பட்டியைச் சேர்ந்த சுரேஷிடமிருந்து ஆறு கார்களையும் 30 பவுன் நகைகளையும் போலிஸ் பறிமுதல் செய்தது. பின்னர் திருச்சி நீதிமன் றத்தில் முன்னிலைப்படுத்தி பிறகு அவரை மத்திய சிறையில் போலிஸ் அடைத்தது. விசாரணை தொடர்கிறது.