கட்சியில் சேர்க்க மறுப்பது குறித்து ஸ்டாலினிடமே கேளுங்கள்: அழகிரி எரிச்சல்

2 mins read
018ca397-daf1-41dc-ac54-0ea7c560d349
-

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்குப் பின், கட்சியில் தன்னை இணைத்துக்கொள்ள மு.க.அழகிரி (படம்) தீவிர முயற் சிகள் மேற்கொண்டார். சென் னையில் நினைவேந்தல் பேரணி நடத்திய அவர் தற்போது தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஒவ்வொரு நாளும் மூன்று, நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த தமது ஆதரவாளர்களை அழைத்து பேசி வருகிறார் அழகிரி. இந்த ரகசிய ஆலோசனை மதுரை தயா திருமண மகாலில் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பேசப்படும் விஷயங்களும் நிகழ்வுகளின் புகைப்படங்களும் வெளியே வரக் கூடாது என்று அழகிரி உத்தரவிட் டிருக்கிறார். இருந்தபோதிலும் ஆலோசிக்கப்பட்ட முக்கிய அம் சங்கள் குறித்து ஆதரவாளர்களில் ஒரு சிலர் ஊடகங்களிடம் தெரி வித்து வருகின்றனர். இந்நிலையில், 'கலைஞர் எழுச்சிப் பேரவை' என்ற பெயரில் புதிய அமைப்பை மு.க. அழகிரி தொடங்க இருப்பதாக அழகிரி ஆதரவாளர் க.இசக்கிமுத்து தெரிவித்தார். இதற்காக, மாவட்ட வாரி யாக ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

ஆனால் இந்தத் தகவலை அழகிரி மறுத்துவிட்டார். "கருணா நிதி பெயரில் புதிய அமைப்பு தொடங்க நான் ஆலோசனை செய்துவருவதாக இசக்கிமுத்து தெரிவித்தது அவரது சொந்தக் கருத்து," என்றார் அழகிரி. நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது அழகிரி திடீரென்று காட்டமாகப் பதிலளித்தார். "திமுகவில் உங்களுக்கு ஏன் வாய்ப்பளிக்கப்படவில்லை?," என்று செய்தியாளர்கள் கேட்ட தற்கு, "இந்தக் கேள்வியை ஸ்டாலி னிடம் போய் கேளுங்கள், என்னி டம் ஏன் கேட்கிறீர்கள்?," என்று அவர் சற்று ஆவேசத்துடன் திருப்பிக் கேட்டார் அழகிரி. படம்: ஊடகம்