சென்னை: சென்னை ஆதம்பாக்கத் தில் 35 ஆண்டுகளாக டீ கடை நடத்திவரும் முருகேசன் என்ப வரின் பெயரில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடன் அட்டை வாங்கி இருப்பது தெரியவந்தது. அவரது பெயரில் 3 போலி நிறுவனங்களை உருவாக்கி ரூ. 3 லட்சத்துக்கு கடன்பெற்று இருப் பதும் கண்டுபிடிக்கப்பட்டது. வங்கியில் அவர் கடன் பெற விண்ணப்பித்தபோது இந்தத் தில்லுமுல்லுகள் தெரியவந்தன. முருகேசன் பெயரில் போலி வாக்காளர் அடையாள அட்டையும் வாகன ஓட்டுநர் உரிமமும் தயாரிக் கப்பட்டு உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேசன் ஆதம்பாக்கம் போலி சில் புகார் செய்தார். போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முருகேசன் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்ற மர்ம நபர்களை போலிஸ் மும்முர மாகத் தேடிவருகிறது.
கடைக்காரர் பெயரில் மோசடி
1 mins read

