சென்னை: தமிழ்நாட்டின் மிக முக் கிய அரசியல் கட்சியான திமுக வின் முதன்மைச் செயலாளராக பழுத்த அரசியல் அனுபவமிக்க டி. ஆர். பாலு நியமிக்கப்பட்டு இருக் கிறார். இதனையடுத்து திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வரு கிறார்கள். திமுகவின் தலைவராக இருந்த கருணாநிதியின் மறைவையடுத்து அந்தக் கட்சியில் பெரும்பெரும் மாற்றங்கள் இடம்பெற்று வருகின் றன. செயல் தலைவராக இருந்த மு. க. ஸ்டாலின் கட்சியின் தலை வராக ஆகியிருக்கிறார். கழகத்தின் முதன்மைச் செயலாளராக இருந்து வந்த துரை முருகன், பொருளாளராகப் பொறுப் பெடுத்துக்கொண்டார்.
துரைமுருகன் விலகியதை அடுத்து முதன்மைச் செயலாளர் பதவி காலியாகவே இருந்து வந் தது. திமுகவில் முதன்மைச் செயலாளர் பதவி என்பது பொரு ளாளர் பதவியைவிட உயர்ந்தது என்பதால் அந்தப் பதவியில் அமரக்கூடிய ஒருவர் நீண்டகாலம் அனுபவம் வாய்ந்த ஒருவராகத் தான் இருக்கவேண்டும் என்று கழக நிர்வாகிகள் கருத்து தெரி வித்து வந்தனர். டி.ஆர். பாலு, எ. வ. வேலு ஆகியோர் பெயர்கள் முதன்மைச் செயலாளர் பதவிக்கு பரிசீலிக்கப் பட்டு வந்தன. இந்த நிலையில் டி.ஆர். பாலுவை அந்தப் பதவியில் நியமித்து அதற்கான உத்தரவை ஸ்டாலின் பிறப்பித்தார். இந்த அறிவிப்புக்கு கட்சித் தொண்டர் கள் மத்தியில் பொதுவாக நல்ல வரவேற்பு உள்ளதாகத் தெரிகிறது. டி.ஆர். பாலு திமுகவில் செல் வாக்குமிக்க தலைவராக இருந்து வருகிறார். முரசொலி மாறனுக்குப் பிறகு புதுடெல்லியில் திமுகவின் முக மாக பலருக்கும் நன்கு பழக்க மானவர் டி.ஆர். பாலு. மத்தியில் பலமுறை அமைச்சர் பொறுப்பை அவர் திறம்பட வகித்து இருக்கிறார். கட்சியில் தொண்டர்களிடத் திலும் பேராளர்களிடத்திலும் அவருக்கு மதிப்பும் செல்வாக்கும் உண்டு என்று கூறப்படுகிறது.

