தென்காசி, செங்கோட்டையில் 144 தடை உத்தரவு

தென்காசி, செங்கோட்டையில் 144 தடை உத்தரவு

2 mins read

நெல்லை: விநாயகர் சிலை ஊர் வலத்தின்போது மோதல் ஏற்பட் டதைத் தொடர்ந்து நெல்லை மாவட்டம் செங்கோட்டை மற்றும் தென்காசியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வியாழனன்று விநாயகர் சதுர்த்தி கோலாகல மாகக் கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன் னிட்டு தமிழகத்தின் பல மாவட்டங் களில் விநாயகர் சிலைகள் வழி பாட்டுக்காக வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பல இடங்களில் நேற்றே விநாய கர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு ஆறு, கடல்களில் கரைக்கப்பட்டன. இந்நிலையில், நெல்லை மாவட் டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்தது. அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் முடிந்தது. மோதலைக் கட்டுப் படுத்த முயன்ற போலிசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

இந்த மோதலின் போது 40 இரு சக்கர வாகனம், 20 கார்கள் சேதப்படுத்தப்பட்டன.

இதனால் செங்கோட்டையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இந்நிலையில் செங்கோட்டை மற்றும் தென் காசியில் மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு நீடிக்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரி வித்துள்ளது. வழக்கமான பாதையில் விநா யகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச்செல்ல பேச்சுவார்த்தை யில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. முப்பது சிலைகளையும் அமை தியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்க ஏற்பாடு செய்யப் பட்டு உள்ளது. செங்கோட்டை, கடையநல்லூர், தென்காசியில் மதுக்கடைகளை மூடவும் மாவட்ட நிர்வாகம் உத் தரவு பிறப்பித்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன.