சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக மத்திய அரசிடம் ஆலோசனை ஏதும் கேட்கவில்லை என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சுக்கு அறிக்கை ஏதும் அனுப்பப்படவில்லை எனவும் ஆளுநர் மாளிகை கூறியுள்ளது. அண்மையில் தமிழக அமைச் சரவைக் கூட்டம் கூட்டப்பட்டு 7 பேரையும் விடுதலை செய்ய வேண் டும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இதுகுறித்த விவரங்களு டன் கூடிய பரிந்துரையை ஆளுந ருக்கு அனுப்பி வைத்தது தமிழக அரசு.
இந்நிலையில், ஏழு பேர் விடு தலை தொடர்பாக மத்திய உள் துறை அமைச்சுக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளதாக தக வல் வெளியானது. இதுகுறித்து சிலர் அதிருப்தி தெரிவித்தனர். இந்நிலையில், 7 பேர் விடுதலை தொடர்பான நீதிமன்ற உத்தரவு மற்றும் தமிழக அமைச்சரவையின் பரிந்துரை ஆகியவை வந்து சேர்ந் ததாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. "இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசனை கேட்டு மத்திய உள்துறைக்கு அறிக்கை எதுவும் அனுப்பப்படவில்லை. 7 பேர் விடு தலை விவகாரத்தில் அரசியல மைப்புச் சட்டப்படி நியாயமான முடிவு எடுக்கப்படும். இது குறித்து ஆலோசனைகள் நடத்த வேண்டி உள்ளது," என்று ஆளுநர் மாளிகை கூறியுள்ளது.

