மாற்றுத்திசு கண்டுபிடிப்பு: தமிழக மருத்துவர் சாதனை

மாற்றுத்திசு கண்டுபிடிப்பு: தமிழக மருத்துவர் சாதனை

1 mins read

மதுரை: புற்று நோயாளிகளுக்கு மிகவும் பயனளிக்கக் கூடிய வகையில் புதிய திசுவை உரு வாக்கிச் சாதனை படைத்துள்ளார் தமிழக மருத்துவர் செந்தில்குமார். மனித திசுக்களுக்கு இணை யான மாற்றுத் திசுவை உரு வாக்கி உள்ள அவருக்குப் பாராட்டுகள் குவிகின்றன. தற்போது மதுரை அரசு மருத்துவமனையின் கதிரியக்க இயற்பியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார் செந்தில்குமார். இந்நிலையில் இரண்டாண்டு கால தீவிர ஆய்வின் மூலம் 'போலஸ்' என்ற மாற்றுத் திசுவை அவர் உருவாக்கி உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற மருத் துவக் கருத்தரங்கில் இந்தக் கண்டுபிடிப்புக்கு முதல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாண்டு கால ஆய் வுக்கு நல்ல பலன் கிடைத்தி ருப்பதாக செந்தில்குமார் கூறுகி றார். அவரது கண்டுபிடிப்பு புற்று நோயாளிகளுக்கான சிகிச்சை யில் வெகுவாகக் கைகொடுக்கும் என்று மதுரை மருத்துவக் கல் லூரி முதல்வர் மருதுபாண்டியன் கூறியுள்ளார்.