அமைச்சருக்கு கட்சிப் பதவி: எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்

அமைச்சருக்கு கட்சிப் பதவி: எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்

1 mins read

சென்னை: அமைச்சர் விஜயபாஸ் கருக்கு குட்கா முறைகேட்டில் தொடர்புள்ளதாகப் புகார் எழுந் துள்ள நிலையில் அதிமுகவில் அவருக்குப் புதுப்பதவி கொடுக்கப் பட்டிருப்பது கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. குட்கா முறைகேடு உட்பட பல் வேறு ஊழல்களில் விஜயபாஸ்க ருக்குத் தொடர்பிருப்பதாக ஊட கங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள் ளன. இந்நிலையில் அவருக்கு அதிமுக அமைப்புச் செயலர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஏற்கெனவே 5 அமைப்புச் செயலர்கள் இருந்தனர்.

இந்நிலையில் மேலும் 3 பேர் அப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிமுக அமைப்புச் செயலர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அதிமுகவின் சட்ட ஆலோசகராக பி.எச். பாண்டியனும், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலராக காஞ்சி பன்னீர்செல்வமும் நியமிக்கப்பட் டுள்ளனர். ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இரு தரப்பினரையும் திருப் திப்படுத்தும் வகையில் இந்த நிய மனங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பதவி கொடுக்கா விட்டால் பலரையும் காட்டிக் கொடுத்துவிடுவார் என்ற அச்சம் காரணமாக அதிமுக தலைமை, விஜயபாஸ்கருக்குப் புதுப்பதவி தந்துள்ளதாக திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.