அனைத்திலும் வெற்றி: ஓபிஎஸ், எடப்பாடி வலியுறுத்து

1 mins read

சென்னை: காலஞ்சென்ற முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் வழியில் மக்கள் தொண்டாற்று வதற்கு அதிமுகவினர் ஒவ்வொருவரும் உறுதி ஏற்று தமிழக அரசைக் காக்க வேண்டும் என அக்கட்சித் தலைமை வலியுறுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த தினத்தை ஒட்டி அதிமுக ஒருங்கி ணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கி ணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள் ளனர். அதில், "மக்களிடையே நற்பெயர் பெற்று, எதிர்வரும் இடைத்தேர்தல், பொதுத் தேர்தல் என எதிர்கொள் ளும் அனைத்துத் தேர்தல்க ளிலும் வெற்றி பெறுவது அதிமுகவுக்கு மிகவும் அவ சியம்," என இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.