பெங்களூரு: பொழுதுக்கும் விழித் திருக்கும் வகையில் சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்திக் கொண்டிருப்பதால் இந்திய விமானிகளுக்குப் போதிய அளவில் உறக்கம் இல்லை என்று இந்திய விமானப் படையின் உயர்மட்ட அதிகாரி பிரேந்தர் சிங் தானாவா கூறியுள்ளார். "ஒவ்வொருவரும் இரவு பின் னேரம் வரை நீண்ட நேரத்தை சமூக ஊடகத்தளங்களில் செல வழிக்கின்றனர்," என்று கூறியுள்ள தானாவா, 2013ல் போர் விமானம் விபத்துக்குள்ளானதற்குச் சமூக வலைத்தளங்களே காரணம் என் றும் கூறியுள்ளார்.
2013ஆம் ஆண்டு இந்திய போர் விமானம் விபத்துக்குள்ளான தற்கு விமானி, போதிய தூக்க மின்றி விமானத்தை இயக்கியதே காரணம் என்றும் இந்திய விமானப் படையின் விமானிகள் இரவு நேரங்களில் மிக அதிகமாக சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருப் பதால்தான் அவர்களால் சரிவர தூங்கமுடிவதில்லை என்றும் தனோவா தெரிவித்துள்ளார். "முன்பெல்லாம் ஒரு விமானி குடித்திருக்கிறார் என்றால் கண்டு பிடித்துவிட முடியும். ஒருவர் இல்லை என்றாலும் இன்னொரு வர் அதைக் கண்டுபிடித்து விமா னத்தை இயக்குவதில் இருந்து விமானியைத் தடுத்துவிடுவார். இப்போதெல்லாம் விமானி குடித் திருப்பதை தெரிந்துகொள்ள சோதிப்பான்கள்கூட இருக்கிறது.
எனவே விமானிகளுக்குப் போது மான தூக்கம் கிடைக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க ஒரு வழியை நாம் கையாளவேண்டும். மருத்துவத் துறையைச் சேர்ந்தவர் கள் இதற்கு சரியான வழிமுறை யைக் கண்டுபிடிக்கவேண்டும். சமூக வலைத்தளங்கள் நமது வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒரு விஷயமாக மாறி விட்டாலும் நம் திறன்களை அது பாதிக்கிறது," என்றார் தனோவா.

