பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம்

2 mins read

மும்பை: மும்பை, புனே நகரங் களைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்குப் பிடித்தமான ஆண் நண்பர்களை வாடகைக்கு எடுப் பதற்கு வசதியாக ஒரு செயலி அ றி மு க ப் ப டு த் த ப் ப ட் டு ள் ள து . இந்தச் செயலி பெண்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கு உதவு வதாகவும் கூறப்படுகிறது. இந்தச் செயலி மூலம் பெண் கள் ஆண் நண்பருடன் சினிமா, கோயில், உணவகம் உள்ளிட்ட பொது இடங்களுக்குச் செல்ல லாம். ஆனால் சொகுசு விடுதிகள், ஓட்டல்கள், வீட்டிற்குச் செல்லக் கூடாது. அவர்களுடன் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது. இதெல்லாம் விதிமுறைகள். அண்மையில் புனே, மும்பை நகரங்களில் 29 வயது கௌசல் பிரகாஷ் என்ற தொழிலதிபர் 'ரென்ட் ஏ பாய்பிரண்ட்' (ஆர்ஏபிபி) என்ற செயலியை தொடங்கி வைத்தார். வாடகை சைக்கிள், கார் போன்று ஆண் நண்பர்களும் இந்தச் செயலி மூலம் வாடகைக்கு கிடைக்கின்றனர்.

பெண்கள் அங்கு கொடுக்கப் பட்டுள்ள பட்டியலில் இருந்து நல்ல தோற்றத்துடன் காணப்படும் ஆண் நண்பர்களைத் தேர்ந்தெ டுக்கலாம். நண்பர்களின் கட்டண மாக ஒரு மணி நேரத்திற்கு ரூ.400 முதல் ரூ.3,000 வரை வசூலிக்கப்படுகிறது. "இந்தச் செயலி பலருக்கும் ஏதோ ஒரு மாதிரியாகத் தோன்ற லாம். ஆனால் இது பெண்களின் மன அழுத்தத்தை பெரிதும் குறைக்க உதவுகிறது," என்கிறார் கௌசல். "புகழ்பெற்ற பிரபலங்களுடன் பழக ரூ.3,000, மாடல்களாகத் தோன்றுபவர்களுக்கு ரூ.2,000, பொதுவான நபர்களுக்கு ரூ.300 முதல் ரூ.400 ரூபாய் வரை ஒரு மணிநேரத்துக்கு செலுத்த வேண்டும்.

"20 முதல் 25 வயதுடைய ஆண் நண்பர்கள், எந்தவிதமான மன அழுத்தத்தால் பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர் களுக்கு உணர்வுபூர்வமாக ஆலோசனை கூறுவர். "ஆண் நண்பர்கள் வேலையில் சேர 10 அல்லது 12 ஆம் வகுப்பு பாஸ் செய்திருக்க வேண்டும். நண்பனாக, வெளியே போகக் கூடிய, துடிப்புமிக்க, ஆர்வ முடைய, நல்ல பேச்சுத்திறன், நல்ல தோற்றமுடைய ஆடவர் களைத் தேர்வு செய்கிறோம். குற்றவாளிகளா என்பது குறித்தும் சோதிக்கப்படுகிறது. "ஏதாவது தவறு நடக்கும் வாய்ப்பு இருப்பின் தனது செயலி சிவப்பு எச்சரிக்கை சமிக்ஞை விடுக்கும்," என்றும் டிஎன்ஏ ஊடகத்திடம் கௌசல் கூறினார்.