'இணைய' வியூகம்: ஸ்டாலின் புது உத்தி

'இணைய' வியூகம்: ஸ்டாலின் புது உத்தி

1 mins read

இந்தியாவை ஆட்சி புரியும் பாஜக வையும் தமிழ்நாட்டை ஆளும் அதிமுகவையும் அதிகாரத்தில் இருந்து அகற்றிவிடவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ள திமுக, அந்தக் குறிக்கோளை நிறைவேற்றும் வகையில் பல காய்களை விவேகமாக நகர்த்தி வருகிறது. அந்தக் கட்சியின் தலைவராக இருந்த கருணாநிதி மறைவை யடுத்து தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ள மு.க.ஸ்டாலின், தகவல் தொழில்நுட்பத்தை மிக முக்கிய பிரசார ஆயுதமாகப் பயன்படுத்த முடிவு செய்திருக்கிறார். "திரு கருணாநிதிக்கு இணை யான எழுத்தாற்றலும் பேச்சாற் றலும் தம்மிடம் இல்லாததை உணர்ந்துகொண்டு இருக்கும் ஸ்டாலின், அந்தப் பலவீனங்களை ஈடுசெய்ய இணையத்தைத் திறம் பட பயன்படுத்தப்போகிறார்.

"இணையத்தில் சமூக வலைத் தளங்களை அதிகமாகப் பயன் படுத்தி இளையர்களை அப்படியே கவரவேண்டும் என்பது ஸ்டாலி னின் திட்டம். இதற்காகவே அவர் தன் சமூக வலைத்தளப் பக்கத் தைச் சுடச்சுட தகவல்களுடன் உயிரோட்டமிக்கதாக நிலைநாட்டி வருகிறார். "மாநிலத்திலும் சரி மத்தியிலும் சரி எந்தச் சம்பவம் நிகழ்ந்தாலும் அது பற்றிய தன் கருத்துகளையும் தன் கட்சியின் கருத்துகளையும் உடனடியாக ஸ்டாலின் பதிவேற்றி வருகிறார்," என்று திமுக தகவல் வட்டாரம் ஒன்று தெரிவித்தது.