சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறைச்சாலை களில் போலிசார் நேற்று அதிரடி சோதனை நடவடிக்கை மேற் கொண்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை புழல் சிறையில் விதிமுறைகளை மீறி தண்டனைக் கைதிகளுக்குப் பல்வேறு வசதி கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட தாகப் புகார் எழுந்தது. புழல் சிறையில் சில கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வது தொடர்பான புகைப்படங்கள் அண்மையில் வெளியாகின.
இதையடுத்து சேலம், கடலூர், கோவை மத்திய சிறைகளில் போலிசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது விதி முறைகளை மீறி கைதிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட் டுள்ளனவா என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கோவை மத்திய சிறையில் 180க்கும் மேற்பட்ட போலிசார் சோதனையில் ஈடுபட்டனர். இதே போல் சேலத்தில் 40 போலிசாரும் கடலூரில் நூற்றுக்கும் மேற்பட்ட போலிசாரும் சோதனை நடத்தி னர். காலை 6 மணிக்குத் தொடங் கிய இந்த அதிரடிச் சோதனை பல மணி நேரம் நீடித்தது. அப்போது கைதிகளிடம் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளனவா என்றும் சோதனை நடத்தப்பட்டது.
புழல் சிறையில் கடும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தனிப் பகுதியில் அடைக்கப்பட்டுள் ளனர். இந்நிலையில் அக்கைதிக ளில் சிலர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது அண்மையில் வெளியான புகைப்படங்கள் மூலம் அம்பலமானது. அனைத்துலக போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இப்பகுதியில் அடைக்கப்பட்டுள்ள னர். இந்தக் கைதிகள் அடைக்கப் பட்டுள்ள அறையில் சொகுசு மெத்தையுடன் கூடிய கட்டில், மேசை, நாற்காலிகள் இருப்பது தெரியவந்தது.

