சென்னை: உயர் நீதிமன்றத்தையும் காவல்துறையையும் கடுமையாக விமர்சித்துள்ள பாஜக தேசிய செயலர் எச்.ராஜா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர். உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து ராஜா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனும் கோரிக் கையும் எழுந்துள்ளது. இந்நிலை யில் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து எச். ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்க வலியறுத்த உள்ளனர். மேலும் ராஜா மீது அவதூறு வழக்கு தொடர வலியுறுத்தி, தமி ழக அரசின் தலைமை வழக்கறி ஞரிடம் மனு அளிக்கவும் வழக்கறி ஞர்கள் முடிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள இடத் தில் பிள்ளையார் சிலை ஊர்வலத் துக்கான மேடை அமைக்க அனு மதி கோரி பாஜக சார்பில் காவல் துறையில் மனு அளிக்கப்பட்டிருந் தது. எனினும் அப்பகுதியில் பள்ளி வாசல் இருப்பதாலும் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டும் மேடை அமைக்க காவல்துறை அனுமதி மறுத்தது. இது பாஜகவினர் மத்தி யில் கடும் அதிருப்தியை ஏற்படுத் தியது. இந்நிலையில் பிள்ளையார் சிலை ஊர்வலகத்திற்குச் சிறப்பு விருந்தினராக வந்த எச்.ராஜா, மேடை அமைக்க அனுமதி மறுத்த காவல்துறையுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் சென்னை உயர் நீதிமன்றம், மற்றும் காவல் துறை குறித்துத் தகாத வார்த்தை களில் விமர்சித்ததாக புகார் எழுந் துள்ளது. சென்னை உயர் நீதிமன் றம் குறித்து அவர் கொச்சையாகப் பேசியது காணொளிப் பதிவாக சமூக வலைத்தளங்கள் வழி பரவியது. இதையடுத்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பின ரும் வலியுறுத்தி வருகின்றனர்.

