நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்வெட்டு அபாயம்

1 mins read

சென்னை: கடும் நிலக்கரி தட்டுப் பாடு காரணமாகத் தமிழகத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட் டுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் மின்தடை ஏற்படும் அபாயம் நிலவுவதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள வடமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரவேண் டிய நிலக்கரி தடைபட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து நிலக் கரியை இறக்குமதி செய்ய தமிழக அரசுக்கு அனுமதி வழங்கியுள்ளது மத்திய அரசு. எனினும் உரிய நேரத்தில் நிலக்கரியை இறக்குமதி செய்ய முடியவில்லை. இதனால் அனல் மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற் கெனவே குற்றம் சாட்டியிருந்தார்.