மதுக்கூடத்தில் பணிபுரியும் ஊழி யர்களை அடித்து உதைத்து, அவர்களைக் காப்பாற்ற வந்த போலிசாரையும் தாக்கி, அவர் களின் சீருடையைக் கிழித்து, மதுக்கூடத்தில் இருந்தவற்றை அடித்து நொறுக்கி மருத்துவர்கள் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. ஆக்ராவில் எஸ்.என்.மருத் துவக் கல்லூரி எனும் புகழ்பெற்ற அரசு மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. அக்கல்லூரியைச் சேர்ந்த இளம் மருத்துவர்கள் சிலர் கடந்த சனிக்கிழமை இரவு தங்களுடைய நண்பர் ஒருவரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக அங்குள்ள 'அசோகா பப் அண்ட் ரெஸ்டா ரண்ட்'டுக்குச் சென்றனர். அவர்கள் ஏற்கெனவே போதை யிலிருந்ததாகவும் அதன்பின்னும் மதுபானம் தரும்படி அசோகா மதுக்கூட ஊழியர்களை வற்புறுத் தியதாகவும் சொல்லப்பட்டது.
ஆனால், மதுக்கூடத்தை மூடும் நேரம் ஆகிவிட்டதால் இனி மேல் மதுபானம் தர முடியாது என அம்மதுக்கூட ஊழியர்கள் அந்த மருத்துவர்களிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, அங்கு ரகளை யில் ஈடுபட்ட அவர்கள், தங்களு டன் மருத்துவக் கல்லூரியில் பணிபுரிவோருக்குத் தகவல் கூறி, அவர்களையும் வரவழைத்தனர். ஏற்கெனவே 25 மருத்துவர்கள் அங்கிருந்த நிலையில், மேலும் 40 மருத்துவப் பணியாளர்கள் அந்த மதுக்கூடத்திற்கு வந்து, அதனை அடித்து நொறுக்கியதாக அதன் மேலாளர் சிவாஜி ஓஜா போலிசில் புகார் அளித்துள்ளார். தகவலறிந்து வந்த போலிசார், மருத்துவர்களையும் மருத்துவப் பணியாளர்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால், அவர்களுக்கும் அடி, உதை விழுந்தது. போலிஸ்காரர் கள் சிலரின் சீருடைகளும் கிழிக் கப்பட்டன. இதையடுத்து, இளம் மருத்து வர்கள் 25 பேரும் கைது செய்யப் பட்டனர். பின்னர் அவர்களில் பத்துப் பேர் பிணையில் விடுவிக் கப்பட்டனர். எஞ்சியுள்ள 15 பேரும் இன்னும் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

