இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனில் நீண்டகால விசாவில் வசித்துவரும் பாகிஸ்தானியர்களில் குறைந்தது 23 பேர் இந்திய வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை வைத்து இருந்ததை உள்ளூர் போலிசின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு போலிஸ் அறிக்கை அனுப்பியிருக் கிறது.
பாகிஸ்தானைச் சேர்ந்த சிந்தி மொழி பேசும் இந்துக்கள் 275 பேர் நீண்டகால விசா மூலம் கடந்த பல ஆண்டுகளாக டேரா டூனில் வசித்து வருகின்றனர். சட்டபூர்வமாக அவர்கள் தங்கி இருப்பினும் ரேஷன் அட்டை, வாக் காளர் அட்டை போன்றவற்றைப் பெற அவர்களுக்கு உரிமையில்லை. இந்த நிலையில், டேராடூன் போலிசின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட ரகசிய நடவடிக்கைகள் மூலம் அவர்களில் 12 பேர் இந்திய வாக்காளர் அட்டையும் 11 பேர் செல்லத்தக்க ரேஷன் அட்டையும் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களி டம் விசாரணை நடத்தி வருவதாக உதவி தலைமை ஆய்வாளர் அஜய் ரௌத்தேலா தெரிவித்தார்.
இதேபோல, கடந்த 2013ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநி லத்தின் பலியா மாவட்டத்திலும் இந்திய வாக்காளர் அட்டை வைத்திருந்ததாக எட்டு பாகிஸ் தானியர்கள் பிடிபட்டனர்.

