திருமண அன்பளிப்பாக பெட்ரோல்

திருமண அன்பளிப்பாக பெட்ரோல்

1 mins read
259063f5-05a2-48b1-8cbe-9917bdccf3d1
-

இல்லற வாழ்வு சீராக ஓட, புதுமணத் தம்பதியருக்கு அவர் களின் நண்பர்கள் பெட்ரோலைப் பரிசாக அளித்த இரு விசித்திர சம்பவங்கள் தமிழகத்தில் நிகழ்ந் துள்ளன. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இத்தகைய நிகழ்வுகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. கடலூர் மாவட்டம், குமராட்சி எனும் ஊரில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலையில் இளஞ்செழியன்=கனிமொழி திரு மணம் நடைபெற்றது. அவ்விழா வில் கலந்துகொள்ள இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த நண்பர்கள் சிலரும் சென்னை நந்தனம் அரசுக் கலைக் கல்லூரி மாணவ நண்பர்கள் சிலரும் வந்திருந்தனர்.

அவர்களில் ஒருவரான பிரபு என்பவர், ஐந்து லிட்டர் பெட்ரோல் அடங்கிய கலனை மணமக்க ளுக்குப் பரிசாக வழங்கினார். நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தைத் தொட்டிருப்ப தால் அது குறித்து பொதுமக்க ளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத் தும் நோக்கில் அவ்வாறு செய்த தாக திரு பிரபு சொன்னார். "நாடு முழுவதும் பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால், நானும் என் நண்பர்களும் மணமக்களுக்கு பெட்ரோலை திருமணப் பரிசாக அளித்து, பொதுமக்களிடம் விழிப் புணர்வை ஏற்படுத்த முயன்றோம்," என்றார் அவர்.

நண்பர்கள் தங்களுக்கு வழங்கிய வித்தியாசமான பரிசைக் கண்டு மணமக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். படம்: தமிழக ஊடகம்