போனவர்கள், வந்தவர்களைப் பிடித்து கடித்த போதைப்பித்தன்

போனவர்கள், வந்தவர்களைப் பிடித்து கடித்த போதைப்பித்தன்

2 mins read
e4e2f5d9-3828-4333-a5ad-2690cc1c0618
-

ஈரோடு: ஈரோட்டில் முக்கியமான ஒரு சாலையில் ஞாயிற்றுக்கிழமை யன்று குடித்துவிட்டு தள்ளாடிய படியே நடந்துவந்த ஒருவர், வழியில் ஒரு பூக்கடையில் வேலை பார்த்து வந்த 13 வயது மாண வனைத் திடீரென்று பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டு கை, கால்களில் கண்ட இடங்களிலும் அவனைக் கடித்துவிட்டார். ரத்தம் கொட்டிய நிலையில் அந்தச் சிறுவனை அப்போது அந்த வழியாக வந்த பலரும் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போதைப்பித்தனைப் பலரும் கண்டபடி தாக்கினார்கள். தப்பி ஓடிய அந்த நபரை விரட்டிக் கொண்டு பலரும் ஓடினர். அப் போது திடீரென அந்தக் குடிகாரர் சாலையில் படுத்துக்கொண்டார். மயக்கம் வந்ததைப்போல் நடித் தார். கொஞ்ச நேரத்தில் திடீரென எழுந்து ஒருவர் மீது பாய்ந்து அவரையும் கை, கால்களில் கடித் தார். இதைப் பார்த்ததும் அங்கு சூழ்ந்திருந்தவர்கள் அலறி அடித் துக்கொண்டு பயந்து ஓடத் தொடங்கிவிட்டார்கள்.

இருந்தாலும் சிலர் ஒன்று சேர்ந்து அந்தப் போதைப் பித்தனை விடாமல் விரட்டிப் பிடித்தார்கள். அவனுடைய கை, கால்களைக் கட்டி சாலையில் ஓரமாக படுக்க வைத்து போலிசை அழைத்தனர். விரைந்து வந்த போலிஸ் அந்த போதை நபரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தது. அவரின் உடல் முழுவதும் அப்போது காய மாக இருந்தது. மதுவுடன் வேறு போதைப் பொருளையும் உட்கொண்டதால் அந்த நபருக்குப் போதை தாறு மாறாக ஏறிவிட்டது என்றும் தான் செய்வது என்ன என்பது தெரி யாமல் வெறிநாய்போல அவர் நடந்துகொண்டார் என்றும் போலி சார் தெரிவித்தனர்.