இதுவரை 6,708 பேருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

இதுவரை 6,708 பேருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

1 mins read
Google News Preferred Icon

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவ மனைகளில் இதுவரை 1,171 பேரிடம் இருந்து தானமாகப் பெறப்பட்ட உறுப்புகள் மூலம், 6,708 பேருக்கு உறுப்புமாற்று சிகிச்சை நடந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னை பெசன்ட் நகரில் நடந்த உடல் உறுப்பு கொடை குறித்த விழிப்புணர்வு ஓட்டம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்ட அமைச்சர், நாட்டிலேயே தமிழகத்தில்தான் முதன்முதலாக உடல் உறுப்புமாற்று சிகிச்சை ஆணையம் உருவாக்கப்பட்டது என்றார். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம், ரூ.35 லட்சம் வரை உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக வழங்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், உடல்உறுப்பு நன்கொடையை மக்கள் இயக்கமாக மாற்ற அனைவரும் முன்வர வேண்டும் என்றார்.