பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

2 mins read
2fcaff90-5f85-4c0b-82ac-fb3151b69ca3
-
Google News Preferred Icon

சென்னை: பாஜக தேசிய செய லாளர் எச். ராஜா, நான்கு வாரங் களுக்குள் சென்னை உயர் நீதி மன்றத்தில் நேரில் முன்னிலை யாகி விளக்கம் அளிக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் மெய்யப்புரத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட எச். ராஜா, காவல்துறை யினரிடம் வாக்குவாதத்தில் ஈடு பட்டார். அந்த வாக்குவாதத்தின் போது, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் போலிஸ் குறித்து அவர் அவதூறாகவும் மிக மோசமாகவும் பேசிய காணொளிக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப் பாகி வருகின்றன.

இதனை எச்.ராஜா மறுக்கிறார் என்றாலும் அவர் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத் தில் சி. ராஜசேகர் என்பவர் முறை யீடு செய்தார். இந்த முறையீட்டை நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் அமர்வு மறுத்தது. இந்நிலையில், எச்.ராஜா மீதான புகாரைத் தாமாக முன்வந்து விசாரிக்க முடிவுசெய்த நீதிபதி சி.டி. செல்வம் அமர்வு, பாஜக தேசிய செயலாளரான ராஜாவை நேரில் வந்து முன்னிலையாக உத்தரவிட் டுள்ளது. நான்கு வாரத்துக்குள் ஏதாவது ஒரு நாளில் எச். ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்குமாறு நீதிபதி சி.டி.செல் வம் அடங்கிய அமர்வு ஆணை பிறப்பித்து உள்ளது.

இதனிடையே, இந்தப் பிரச் சினை பற்றி கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை, போலிசுக்கு எதிராக எச். ராஜா வாதம் செய்தது சரி என்றும் ஆனால் அவர் கூறிய வார்த்தை யில் தமக்கு ஒப்புதல் இல்லை என்றும் கூறினார்.

இந்த விவகாரம் பற்றி செய்தி யாளர்களிடம் சென்னையில் கருத்து தெரிவித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக் குமார், "எச். ராஜா நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து மிக மோசமான விமர்சனத்தை வைத்து இருக்கிறார். அவர், காவல் துறைக்குக் களங்கம் கற்பிக்கிற வகையில் மிகமோசமான சொற் களை எல்லாம் பயன்படுத்தி இருக்கிறார்.

"எனவே சட்ட வல்லுநர்களின் கருத்துக்களை அறிந்து அவர் மீது மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு பரிசீலிக்கும்," என்று தெரிவித்தார். இவ்வேளையில், எச். ராஜா போலிஸ் பாதுகாப்புடன் அவரது பண்ணைவீட்டில் இருந்து காரைக் குடி சுப்பிரமணியபுரம் 9ஆவது வீதியில் உள்ள அவரது சொந்த வீட்டுக்கு நேற்று சென்றதாக பல காணொணிகளை மேற்கோள் காட்டி தகவல்கள் தெரிவித்தன. திருமயம் காவல் நிலையத் தில் எட்டு பிரிவுகளின் கீழ் எச். ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளதால் அவர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக பல தரப்புகளும் தெரிவித்து வரு கின்றன.

புதுக்கோட்டை மாவட்டம் மெய்யப்புரத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்துகொண்ட எச். ராஜா, காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத சொற்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. படம்: தமிழக ஊடகம்