2வது நாளாக தொடர்ந்து எரிந்த சந்தை

2வது நாளாக தொடர்ந்து எரிந்த சந்தை

2 mins read
fcbfc9c5-d6b5-40de-a540-5254097b77d0
-

கோல்கத்தா: கோல்கத்தாவில் உள்ள பாக்ரி எனும் பிரபல சந்தையில் ஞாயிறு இரவு 2.30 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் நேற்றும் கட்டடத் தின் சில பகுதிகளில் தீ தொடர் வதாக தகவல் வெளியானது. தீ விபத்து பற்றி பேசிய தீயணைப்புத் துணை இயக்குநர், "தரைதளம் முதல் மேல்தளம் வரை பரவிய தீயைப் பல மணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தோம். ஆனால், கட்டடத்தின் உள்பகுதியில் சில ரசாயன பொருட்களின் காரணமாக ஏற் பட்டிருக்கும் தீயை அணைப்பது மிகவும் கடினமான செயலாக உள்ளது," என்றார். "தற்போது 35 தீ அணைப்பு வாகனங்களுடன் 250 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்," என்றும் அவர் சொன்னார்.

சந்தையில் சுமார் 400 கடைகள் அமைந்துள்ள 6 மாடி கட்டடத்தில் திடீரென்று தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் அந்தக் கட்ட டத்தின் அனைத்துத் தளங்களுக் கும் தீ பரவி வேகமாக எரிய தொடங்கியது. இது பற்றிய தகவல் அறிந்ததும் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 30 வாகனங்களில் தீ அணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணி யில் ஈடுபட்டனர். பல மணி நேரத் திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தத் தீ விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற் பட்டதாக தகவல் இல்லை. ஆனால் இரண்டு தீயணைப்பு வீரர்கள் காயம் அடைந்ததாகவும் அவர்கள் உடனடியாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோல்கத்தாவில் உள்ள பிரபல பாக்ரி சந்தையில் மூண்ட தீ நேற்றும் 2வது நாளாக தொடர்ந்தது. படம்: ஈபிஏ