சென்னை: திருப்பெரும்புதூரில் ரூ.9.7 கோடி செலவில் நிலத் தடியில் மின் கம்பிகள் பதிக்கும் பணி விரைவில் தொடங்கப் படுகிறது. இந்திய அரசாங்கத்தின் மின்துறை அமைச்சு, நாடு முழுவதும் தரமான தடங்கலற்ற மின் சாரத்தை வழங்குதல் மற்றும் மின் இழப்பைத் தடுத்தல் குறித்து ஆய்வுசெய்தது. இதில், 20 விழுக்காட்டுக்கும் அதிகமான மின்இழப்பு மின் கம்பிகள் மூலம் வீணாவது கண் டறியப்பட்டது. இதை, 15 விழுக்காடாகக் குறைக்க நிலத்தடி மின் கம்பித் திட்டம் கொண்டுவர முடிவு செய் தது. இத்திட்டத்தை 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, 30,000க்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட நகரங்களில் செயல் படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் திருப்பெரும்புதூர் பகுதியில் நிலத்தடியில் மின் கம்பி பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
நகரங்களில் நிலத்தடி மின்கம்பி
1 mins read

