மோடியின் சகோதரருடன் துணை முதல்வர் ஓபிஎஸ் சந்திப்பு

மோடியின் சகோதரருடன் துணை முதல்வர் ஓபிஎஸ் சந்திப்பு

1 mins read
Google News Preferred Icon

சென்னை: பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடியை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் (படம்) சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை வந்தார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த அவரை அன்று மாலை துணை முதல்வரும் அதிமுக ஒருங் கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் சந்தித்துப் பேசினார்.

இது தமிழக அரசியல் வட்டாரத் தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் ஓபிஎஸ் - பழனிசாமி அணிகள் இணைந்த பிறகு பல்வேறு மாற்றங்கள் ஏற் பட்டு வருகின்றன. இருவரும் இணைந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். இணைந்து செயல்படுவதாகவும் அறிவிக்கின் றனர். ஆனால், நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக இரு தரப்பு ஆதரவாளர்கள் மத்தியிலும் கருத்துவேறுபாடு தொடர்கிறது. மூத்த நிர்வாகிகள் பலரும் இதை அவ்வப்போது சுட்டிக்காட்டி வரு கின்றனர். அண்மையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க ஓபிஎஸ்ஸுக்கு அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. முதலில் ஓபிஎஸ் ஸுக்கு முக்கியத்துவம் அளித்த பாஜக, தற்போது அவரை கைவிட்டுவிட்டதாகக் கூறப்படு கிறது.