பாஜகவினரால் தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநரை நேரில் சந்தித்து தமிழிசை ஆறுதல்

பாஜகவினரால் தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநரை நேரில் சந்தித்து தமிழிசை ஆறுதல்

2 mins read

சென்னை: பாஜகவினரால் தாக் கப்பட்ட ஆட்டோ ஓட்டுநரின் வீட்டிற்கு நேரில் சென்று தமிழிசை சௌந்தரராஜன் நலம் விசாரித்தார். சென்னை சைதாப்பேட்டையில் திங்கட்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவருக் குப் பின்னால் இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பெட்ரோல் விலை ஏன் இப்படி உயர்கிறது என்று கேள்வி எழுப்பினார். "ஒரு நிமிஷம் அக்கா, பெட் ரோல் விலை ஏன் உயர்கிறது" என்று ஆட்டோ ஓட்டுநர் கேட் டார். அதைக் கவனிக்காத தமி ழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களின் கேள்வி களுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தார். ஆனால், தமிழிசைக்குப் பாதுகாப்பாக அவருக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த பாஜக தொண்டர் ஒருவர் அந்த ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கிய தோடு ஒரே தள்ளாகத் தள்ளி அவ்விடத்தைவிட்டு வெளி யேற்றினார்.

அந்தக் காட்சி, காணொளி யாக சமூக ஊடகங்களில் பர வத் தொடங்கியது. இந்நிலையில் அந்த ஆட்டோ ஓட்டுநர் கதிரின் வீட்டிற்கு நேரில் சென்ற தமி ழிசை சௌந்தரராஜன் அவரிடம் நலம் விசாரித்தார். அதோடு ஆட்டோ ஓட்டுநர் கதிருக்கு இனிப்பு வழங்கினார். கதிரை சந்தித்துவிட்டு வெளியே வந்த தமிழிசை, "தாக்கப்பட்டதாக தகவல் பரப்பப்பட்டதால் நேரில் வந்து கேட்டேன். தான் ஓர் ஆட்டோ ஓட்டுநராக இருப்பதால் அவர் பெட்ரோல் விலை உயர்வு குறித்துக் கேட்டதாகவும், மது அருந்தி இருந்ததாலும் அங் கிருந்து அவரை வெளியேற்றினர். யாரும் அடிக்கவும் இல்லை, மிரட்டவும் இல்லை," என்றார். "சில கட்சியினர் அவரை அணுகி தாக்கப்பட்டதாக கண் டனச் சுவரொட்டிகள் அச்சிடவும் கேட்டார்களாம். ஆனால் தான் எந்தக் கட்சியையும் சாராதவன் என்றும் அதற்குச் சம்மதிக்க வில்லை என்றும் அவர் தெரி வித்தார்," என தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.