தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

10 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்

1 mins read

சென்னை: தமிழகத்தில் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று பிறப்பித்தார். உத்தரவில் தமிழ்நாடு சர்க்கரைத்துறை ஆணையராக ரீடா ஹரீஸ் தாக்கூர், வேளாண்துறை கூடுதல் இயக்குநராக விஜயராணி, நிலநிர்வாக இணை ஆணையராக கற்பகம், ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் செயலராக பிங்கி ஜோயல், பொதுப் பணித்துறை கூடுதல் செயலராக பாலாஜி உள்ளிட்ட 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.