சேலத்தில் இரண்டாவது விமான சேவை

1 mins read

சேலம்: சேலம் மாவட்டம், கமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து ட்ரூஜெட் நிறுவனம் இரண்டாவது விமானச் சேவையை அடுத்த மாதம் 28ஆம் தேதி தொடங்க உள்ளது. ஓமலூர் அருகேயுள்ள கமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் உள்ளது. ஏழு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இந்த விமான நிலையத்தில் இருந்து விமானப் போக்குவரத்து சேவையை முதல்வர் பழனிசாமி, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோர் கடந்த மார்ச் 25ஆம் தேதி தொடங்கி வைத்தனர். இந்நிலையில் 'ட்ரூ' ஜெட் நிறுவனம் தனது இரண்டாவது விமானச் சேவையை அடுத்த மாதம் தொடங்க உள்ளது.