எச். ராஜாவிற்கு பலதரப்பிலும் முற்றுகிறது நெருக்கடிகள்

எச். ராஜாவிற்கு பலதரப்பிலும் முற்றுகிறது நெருக்கடிகள்

1 mins read

சென்னை: நீதிமன்றத்தை அவமதிக்கும்விதமாக பேசி சிக்கலில் மாட்டிக்கொண்ட எச் ராஜாவிற்கு அனைத்துத் தரப்பில் இருந்தும் நெருக் கடிகள் அதிகரித்துள்ளன. புதுக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது தேவாலயம் அருகே மேடை அமைக்க காவல்துறையினர் அனுமதி வழங்காததால் அவர் களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எச் ராஜா, காவலர்களைக் கேவலமான வார்த்தைகளால் திட்டினார். அதோடு மட்டுமின்றி நீதிமன்றத்தையே அவமதித்து கீழ்த்தரமான வார்த்தைகளால் விமர்சித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக அக்டோபர் 3ஆம் தேதி நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க எச் ராஜாவுக்கு உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப் பட்டுள்ளது. மற்றொரு பக்கம் சென்னை காவல் ஆணையரிடம் இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் எச்.ராஜா அவதூறாகப் பேசியதாக குற்றம் சாட்டியுள்ள னர். எச்.ராஜா மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளனர். மேலும், எச்.ராஜா மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசு வதாகவும், அவர் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையென்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிமுக எம்.பி. அருண்மொழித்தேவன் செய்தி யாளர்களிடம் கூறியுள்ளார்.