உயர்நிலைப்பள்ளி மாணவனை மணம் புரிந்த கல்லூரி மாணவி கைது

உயர்நிலைப்பள்ளி மாணவனை மணம் புரிந்த கல்லூரி மாணவி கைது

1 mins read
Google News Preferred Icon

திருவண்ணாமலை: திருவண்ணா மலையில் தன்னைவிட வயது குறைந்த பதின்ம வயது மாண வரைத் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்திய கல்லூரி மாணவியை போலிசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், கெங்கல மகாதேவி பகுதியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்த மாணவியை கடத்திச் சென்றுவிட்டதாக மாணவியின் பெற்றோர் திருவண் ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மனு அளித்த னர். இதுதொடர்பாக முதன்மை மாவட்ட நீதிபதி மகிழேந்தி கெங்கலமகாதேவி கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் கல்லூரி மாணவி 'மேஜர்' என்பதும் அந்த வாலிபர் பிளஸ் 2 படிக்கும் மைனர் (17 வயது) என்பதும் தெரியவந்தது. மேலும் இருவரும் திருமணம் செய்துகொண்டதும் தெரிந்தது. இதையடுத்து கல்லூரி மாணவி கைதானார். தலைமறைவான மாணவரைத் தேடி வருகின்றனர்.