சென்னை: தமிழிசையிடம் கேள்வி கேட்க முயன்றபோது பாஜகவினர் என்னைத் தாக்கியது உண்மை தான். அதில் எந்த ஒரு பொய்யும் இல்லை எனத் தெரிவித்துள்ள ஆட்டோ ஓட்டுநர் கதிர், பாஜக வினர் தாக்கியது தமிழிசைக்குத் தெரியாது என்றும் கூறினார். "எனக்குக் குடிப்பழக்கம் உள் ளது என்பது என் தனிப்பட்ட விவகாரம். அதை பொது இடத்தில் பகிரங்கப்படுத்திய டாக்டர் தமிழி சையின் செயல் வருத்தம் தரு கிறது. இது தவறு. இதை பிரச் சினையாக்க விரும்பவில்லை. பெட்ரோல், டீசல் விலை குறைந் தால் போதும்," என்றார் கதிர்.
கடந்த 16ஆம் தேதி சைதாப் பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழிசையிடம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து கதிர் கேள்வி எழுப்பினார். அப்போது பாஜகவினர் சிலர் அவரைத் தாக்கியதாகக் குற்றச் சாட்டு எழுந்தது. சமூக வலைத்தளங்களில் கதிருக்கு ஆதரவாகப் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதற்கிடையே கதிரையும் அவரது குடும்பத்தினரையும் தமிழிசை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவரது குடும்பத் தினருக்கு இனிப்புகள் வழங்கி ஆறுதலும் கூறினார்.

