கடலூர்: கடந்த ஏழு ஆண்டுக ளாக உழைப்பு சுரண்டப்பட்டு, அடிமைகளாக நடத்தப்பட்ட இருளர் சமூகத்தைச் சேர்ந்த 32 பேர் மீட்கப்பட்டனர். இவர்களில் 11 சிறார்களும் அடங்குவர். கடலூர் மாவட்டம், புலியூர் காட்டுசகாய் பகுதியில் இருக்கும் கரும்புத் தோட்டத்தில் இவர்கள் கடந்த ஏழு ஆண்டுகளாக ஒப் பந்த தொழிலாளர்களாக அடிமை வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். ரூ.50,000 கடன் வாங்கிய விவகாரம் தொடர்பில் இவர் களுடன் ஒப்பந்தம் போடப்பட்டு, ஏழு ஆண்டுகளாக வேலை வாங்கி வந்துள்ளனர். மாவட்ட நிர்வாகத்துக்கும் தொழிலாளர் துறைக்கும் வந்த தகவல்களின் படி இந்த மீட்பு நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மீட்கப்பட்ட பெண்கள், கரும் புத் தோட்டத்தில் வேலை பார்ப்ப தற்கு மட்டுமின்றி பாலியல் ரீதி யாகவும் சுரண்டப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தன்னார்வத் தொண்டு நிறு வனத்தின் தலைவரான டாக்டர் கிருஷ்ணன் இவ்விவகாரம் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் கொடுத்தார். "ஒப்பந்த தொழிலாளர்களாக இருந்த அனைவருக்கும் வாரத் துக்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரை கூலி கொடுக்கப்பட்டுள் ளது. அதில் பெரும்பகுதி கடனைக் காரணம் காட்டி பிடித்தம் செய் துள்ளனர். பல நேரங்களில் அவர் களுக்கு கடலூரில் வேலை தரா மல் வாகனங்களில் வேறு இடங் களுக்கு அழைத்துச் சென்று வேலை வாங்கி உள்ளனர்," என்று டாக்டர் கிருஷ்ணன் கூறினார். மீட்கப்பட்டவர்களுக்கு நிவா ரண உதவிகளை வழங்க கடலூர் மாவட்ட நிர்வாகம் தற்போது நட வடிக்கை எடுத்து வருகிறது.

